Rows of young palms growing on in the nursery beds
Golden Jubilee year, 1976 to 2026, fifty years GOLDEN JUBILEE YEAR 1976 · 2026 50 YEARS

Periyakulam · Theni District

பெரியகுளம் · தேனி மாவட்டம்

Sri Lakshmi Nursery

ஸ்ரீ லட்சுமி நர்சரி

Periyakulam, Theni — since 1976

பெரியகுளம், தேனி — 1976 முதல்

Half a century of practical farming and nursery work, and horticulture graduates in the family since. Millions of seedlings have gone out from these beds — and they still go out, every week of the year.

அரை நூற்றாண்டு கால விவசாய, நர்சரி அனுபவம். குடும்பத்தில் தோட்டக்கலைப் பட்டதாரிகள். இந்தப் பாத்திகளிலிருந்து பல லட்சக்கணக்கான கன்றுகள் சென்றிருக்கின்றன — இன்றும் ஒவ்வொரு வாரமும் செல்கின்றன.

Why buy from us

ஏன் எங்களிடம் வாங்க வேண்டும்

Four things, and we have all four

நான்கு விஷயங்கள் - நான்கும் எங்களிடம் உண்டு

Most nurseries have one or two of these. The numbers under each one are ours, and you can check every one of them.

பெரும்பாலான நர்சரிகளிடம் இதில் ஒன்றோ இரண்டோ இருக்கும். கீழே உள்ள எண்கள் எங்களுடையவை - ஒவ்வொன்றையும் நீங்கள் சரிபார்க்கலாம்.

01
50yearsஆண்டுகள்

Legacy

பாரம்பரியம்

The same family has run this nursery since 1976, on the same soil. Fifty years of farmers coming back, and sending their sons - that is what trust is built out of.

1976 முதல் இதே குடும்பம், இதே மண். ஐம்பது ஆண்டுகளாக விவசாயிகள் திரும்பத் திரும்ப வருகிறார்கள், தங்கள் மகன்களையும் அனுப்புகிறார்கள் - நம்பிக்கை அப்படித்தான் கட்டப்படுகிறது.

02
66varietiesரகங்கள்

Practical experience

நேரடி அனுபவம்

The owners and the men working the beds have farmed these crops themselves, not only sold them. That hands-on expertise is why we can keep 66 named varieties across 43 species alive and ready to lift - and tell you which one suits your soil.

உரிமையாளர்களும் பாத்திகளில் வேலை செய்பவர்களும் இந்தப் பயிர்களைத் தாங்களே விளைவித்தவர்கள் - வெறும் விற்பனையாளர்கள் அல்ல. அந்த நேரடி தேர்ச்சி இருப்பதால்தான் 43 வகைகளில் 66 ரகங்களை உயிரோடு, எடுக்கத் தயாராக வைத்திருக்க முடிகிறது - உங்கள் மண்ணுக்கு எது சரி என்றும் சொல்ல முடிகிறது.

03
3qualificationsபட்டங்கள்

Education

படிப்பு

A diploma in agriculture, an M.Sc. in horticulture and a Ph.D. in its final year - in the same family that works the beds. Theory and practice together, so what you get across the counter is a professional opinion on the current method, not a guess.

பாத்திகளில் வேலை செய்யும் அதே குடும்பத்தில் வேளாண்மை டிப்ளமோ, தோட்டக்கலையில் M.Sc., இறுதியாண்டு Ph.D. கோட்பாடும் நடைமுறையும் சேர்ந்திருப்பதால், இங்கே கிடைப்பது ஊகம் அல்ல - இன்றைய முறை பற்றிய தொழில்முறை ஆலோசனை.

04
1.5 millionviewsபார்வைகள்

Reach

அறியப்பட்ட பெயர்

Our growing advice has been watched 1.5 million times, with 11,000+ following on YouTube and Instagram for tips and new stock. This is a well known nursery - watch how we work before you spend a rupee here.

எங்கள் தோட்டக்கலைக் குறிப்புகள் 1.5 million முறை பார்க்கப்பட்டுள்ளன; குறிப்புகளுக்காகவும் புதிய வரத்துக்காகவும் 11,000+ பேர் யூடியூப், இன்ஸ்டாகிராமில் பின்தொடர்கிறார்கள். இது நன்கு அறியப்பட்ட நர்சரி - ஒரு ரூபாய் செலவழிக்கும் முன் நாங்கள் எப்படி வேலை செய்கிறோம் என்று பாருங்கள்.

Come and see us

வந்து பாருங்கள்

Two nurseries, two kilometres apart

இரண்டு நர்சரிகள், இரண்டு கிலோமீட்டர் இடைவெளி

Both on the Madurai Road. The rose nursery at E. Puthupatty is where the family started in 1976; the nursery at E. Kamatchipuram grew into the larger of the two. Between them, a single potted rose or ten thousand trees.

இரண்டும் மதுரை சாலையில். எ.புதுப்பட்டி ரோஸ் நர்சரியில்தான் 1976-ல் குடும்பம் தொடங்கியது; எ.காமாட்சிபுரம் நர்சரி பெரிதாக வளர்ந்தது. ஒரு தொட்டி ரோஜா முதல் பத்தாயிரம் மரக்கன்று வரை - இரண்டிலும் கிடைக்கும்.

Main nursery
முதன்மை நர்சரி

Sri Lakshmi Horticulture
Nursery Garden

  • Fruit trees
  • Timber
  • Palms
  • Coconut
  • Orchard & field orders
  • பழ மரங்கள்
  • மரக் கன்றுகள்
  • பனை
  • தென்னை
  • தோட்டம், வயல் ஆர்டர்கள்
E. Kamatchipuram,
near the Horticulture College,
Endapuli (Po), Periyakulam (Tk),
Theni District, Tamil Nadu 625604
Google Maps — Sri Lakshmi Nurseryகூகுள் மேப்ஸ் — ஸ்ரீ லட்சுமி நர்சரி
The rose nursery · since 1976
ரோஸ் நர்சரி · 1976 முதல்

Madurai Meenakshi
Rose Nursery Garden

  • Roses
  • Flowering plants
  • Ornamental plants
  • Home gardens
  • A few pots

This is where the family began.

  • ரோஜா
  • பூச்செடிகள்
  • அலங்காரச் செடிகள்
  • வீட்டுத் தோட்டம்
  • சில தொட்டிகள்

குடும்பம் தொடங்கிய இடம் இதுவே.

Madurai Road, E. Puthupatty,
Endapulli Pudhupatti,
Endapuli (Po), Periyakulam (Tk),
Theni District, Tamil Nadu 625604
Google Maps — Madurai Meenakshiகூகுள் மேப்ஸ் — மதுரை மீனாட்சி
Both open every day, 7 in the morning to 7 in the evening.
No weekly holiday, and someone is at each nursery to help you choose. If you are travelling a distance, give us a ring first and we will tell you what is ready.
இரண்டும் தினமும் திறந்திருக்கும் - காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை.
வாராந்திர விடுமுறை இல்லை. இரண்டு நர்சரியிலும் தேர்ந்தெடுக்க உதவ ஆட்கள் இருப்பார்கள். தூரத்திலிருந்து வருகிறீர்கள் என்றால் முன்பே ஒரு போன் போடுங்கள் - என்ன தயாராக இருக்கிறது என்று சொல்கிறோம்.

Bought from us before? A word on Google helps the next farmer find us. Write a Google review.

முன்பு எங்களிடம் வாங்கியிருக்கிறீர்களா? கூகுளில் ஒரு வார்த்தை எழுதினால் அடுத்த விவசாயிக்கு உதவியாக இருக்கும். கூகுள் மதிப்பீடு எழுதுங்கள்.

Planning a garden, an orchard or a farm?

தோட்டம், தோப்பு அல்லது பண்ணை அமைக்கிறீர்களா?

Tell us the land, the water and the budget. We will tell you what will grow.

நிலம், தண்ணீர், பட்ஜெட் சொல்லுங்கள். எது வளரும் என்று சொல்கிறோம்.

Who we are

நாங்கள் யார்

Same family, same land

அதே குடும்பம், அதே நிலம்

Four of us have worked these beds. Each one learned it from the person before him, and picked up something new along the way.

இந்தப் பாத்திகளில் நாங்கள் நான்கு பேர் வேலை செய்திருக்கிறோம். ஒவ்வொருவரும் தமக்கு முந்தையவரிடம் கற்றுக்கொண்டு, தாமாகவும் ஒன்றைச் சேர்த்தார்.

1976Started the nurseryநர்சரியைத் தொடங்கியவர்
Portrait of O. Otchathevar, who started the nursery

O. Otchathevar

Founder · Father of Ramasamy and Pandi

நிறுவனர் · ராமசாமி மற்றும் பாண்டியின் தந்தை

He began with fruit saplings on a small plot. He sold to whoever walked in, and if a plant did not survive he took it back. People remembered that, and they told others.

ஒரு சிறிய நிலத்தில் பழ மரக் கன்றுகளுடன் தொடங்கினார். வருபவர்களுக்கு விற்றார். செடி பிழைக்கவில்லை என்றால் திரும்பப் பெற்றுக்கொண்டார். அதை மக்கள் நினைவில் வைத்தார்கள், மற்றவர்களிடமும் சொன்னார்கள்.

SecondElder son
இரண்டாம்மூத்த மகன்
Portrait of O. Ramasamy

O. Ramasamy DIPL. AGRI

Grafting and mother trees

ஒட்டு வேலை மற்றும் தாய் மரங்கள்

He studied agriculture and brought grafting and budding into the nursery. That is what let us supply orchards and not only house gardens. He still does most of the grafting.

வேளாண்மை படித்தவர். ஒட்டுமுறையை நர்சரிக்குக் கொண்டு வந்தவர். அதனால்தான் வீட்டுத் தோட்டங்களுடன் நிற்காமல், பெரிய தோட்டங்களுக்கும் கன்று கொடுக்க முடிகிறது. இப்போதும் பெரும்பாலான ஒட்டு வேலையை அவரே செய்கிறார்.

SecondYounger son
இரண்டாம்இளைய மகன்
Portrait of O. Pandi

O. Pandi

Field work and the second nursery

வயல் வேலை மற்றும் இரண்டாவது நர்சரி

He looks after the day-to-day work in the beds and runs the second nursery at E. Puthupatty, about two kilometres away on the Madurai Road. If you are collecting a large order, you will usually deal with him.

பாத்திகளில் அன்றாட வேலைகளைக் கவனிப்பவர். மதுரை சாலையில், சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள எ.புதுப்பட்டி நர்சரியை நடத்துகிறார். பெரிய அளவில் கன்று எடுத்துச் செல்பவர்கள் பொதுவாக அவரிடம்தான் பேசுவார்கள்.

ThirdRamasamy’s son
மூன்றாம்ராமசாமியின் மகன்
Portrait of R. Shanthanu

R. Shanthanu M.SC. (HORT.) · PH.D. FINAL YEAR

Landscaping, and the videos

தோட்ட அமைப்பு மற்றும் வீடியோக்கள்

He studied horticulture and is finishing a Ph.D. in floriculture and landscape architecture. He handles the garden and landscaping work, and he is the one posting the gardening tips online. If you have a question, he will usually answer it.

தோட்டக்கலை படித்தவர். மலர் வளர்ப்பு மற்றும் தோட்ட வடிவமைப்பில் முனைவர் பட்டப் படிப்பை முடிக்கும் நிலையில் இருக்கிறார். தோட்டம் அமைக்கும் வேலைகளைக் கவனிக்கிறார். இணையத்தில் தோட்டக்கலைக் குறிப்புகளைப் பகிர்வதும் இவரே. கேள்வி இருந்தால் பொதுவாகப் பதில் சொல்வார்.

Everything we sell

நாங்கள் விற்பவை

What we grow

என்ன வளர்க்கிறோம்

From fruit grafts to garden tools. What is ready changes with the season and the stock — please call or WhatsApp before you travel.

பழ ஒட்டுக் கன்று முதல் தோட்டக் கருவிகள் வரை. பருவத்திற்கும் இருப்புக்கும் ஏற்ப மாறும் — கிளம்பும் முன் அழைத்தோ வாட்ஸ்அப்பிலோ கேளுங்கள்.

Plants

செடிகள்

Fruit cropsபழ வகைகள்
Plantation cropsதோட்டப் பயிர்கள்
Flower cropsபூச்செடிகள்
Timber wood seedlingsமரக் கன்றுகள்
Rare & new varietiesபுதிய, அரிய ரகங்கள்
Turf grassesபுல் வகைகள்
Indoor plantsஉட்புற செடிகள்
Ornamental plantsஅலங்காரச் செடிகள்
Orchidsஆர்கிட்
Avenue treesநிழல் மரங்கள்

Pots and tools

தொட்டிகள், கருவிகள்

Flowering potsபூத் தொட்டிகள்
Garden toolsதோட்டக் கருவிகள்

Fruit variety index

பழ ரக பட்டியல்

43 species · 66 named varieties · grafts, buds and seedlings

43 வகைகள் · 66 ரகங்கள் · ஒட்டு, பதியம், விதைக் கன்று

Mango
Mangoமா
Mangifera indica
AlphonsoBanganapalliMalgovaMallikaNeelamRumaniKallamaiKalapadiImam PasandMiyazakiKesarSendhuramKasthuriHimayat
Graft
Jackfruit
Jackfruitபலா
Artocarpus heterophyllus
Palur-1Vietnam Early All SeasonJ-33Red JackAll SeasonEVIARCThen Varikkai
GraftSeedling
Coconut
Coconutதென்னை
Cocos nucifera
TallGreen DwarfOrange DwarfHybrid (D×T)Hybrid (T×D)CODMOD
Seedling
Guava
Guavaகொய்யா
Psidium guajava
AllahabadL-49RedPinkLalit RedVNRTaiwan PinkArka Kiran
Graft
Sapota
Sapotaசப்போட்டா
Manilkara zapota
PKM-1Kalipatti
Graft
Papaya
Papayaபப்பாளி
Carica papaya
Red Lady (F1 hybrid)Naadu
Seedling
Acid lime
Acid limeஎலுமிச்சை
Citrus aurantifolia
BalajiSeedlessTaiwanMarket lime
Budded
Sweet lime (Mosambi)
Sweet lime (Mosambi)சாத்துக்குடி
Citrus sinensis
Budded
Orange
Orangeஆரஞ்சு
Citrus reticulata
Budded
Pomelo
Pomeloபப்ளிமாஸ்
Citrus maxima
Budded
Sour orange / rough lime
Sour orange / rough limeநார்த்தை
Citrus aurantium
Budded
Pomegranate
Pomegranateமாதுளை
Punica granatum
BhagwaSeedless
Graft
Amla
Amlaநெல்லி
Phyllanthus emblica
NA-7ChakkaiyaKanchanKrishnaBSR-1
Graft
Star gooseberry
Star gooseberryஅரு நெல்லி
Phyllanthus acidus
Seedling
Tamarind
Tamarindபுளி
Tamarindus indica
PKM-1UriyanSweet tamarind
GraftSeedling
Drumstick
Drumstickமுருங்கை
Moringa oleifera
Kappalpatti Karu MurungaiPKM-1
Seedling
Custard apple
Custard appleசீதா
Annona squamosa
Ram SeethaMull SeethaWest Bengal Seetha
GraftSeedling
Ramphal
Ramphalராமசீதா
Annona reticulata
Seedling
Cashew
Cashewமுந்திரி
Anacardium occidentale
GraftSeedling
Arecanut
Arecanutபாக்கு
Areca catechu
Seedling
Banana
Bananaவாழை
Musa spp.
Dwarf (tissue culture)
TC plant
Jamun / Naval
Jamun / Navalநாவல்
Syzygium cumini
Graft
Rose apple
Rose appleஜாம்பழம்
Syzygium jambos
Graft
Malayan apple
Malayan appleமலேயன் ஆப்பிள்
Syzygium malaccense
Graft
Water apple
Water appleஜாம்பு
Syzygium aqueum
Graft
Rambutan
Rambutanரம்புட்டான்
Nephelium lappaceum
Graft
Mangosteen
Mangosteenமங்குஸ்டின்
Garcinia mangostana
Graft
Avocado / butter fruit
Avocado / butter fruitவெண்ணெய் பழம்
Persea americana
Graft
Litchi
Litchiலிச்சி
Litchi chinensis
Graft
Nutmeg
Nutmegஜாதிக்காய்
Myristica fragrans
ICAR varieties
Graft
Star fruit / carambola
Star fruit / carambolaஸ்டார் புரூட்
Averrhoa carambola
Graft
Bilimbi
Bilimbiபிலிம்பி
Averrhoa bilimbi
Seedling
Breadfruit
Breadfruitஈரப்பலா
Artocarpus altilis
Seedling
Star apple
Star appleநட்சத்திரப் பழம்
Chrysophyllum cainito
Graft
West Indies cherry
West Indies cherryசெர்ரி
Malpighia glabra
Seedling
Ber
Berஇலந்தை
Ziziphus mauritiana
ThailandSeemai Elanthai
Graft
Karonda
Karondaகிளாக்காய்
Carissa carandas
Seedling
Loquat
Loquatலோக்குவாட்
Eriobotrya japonica
Graft
Dragon fruit
Dragon fruitடிராகன் பழம்
Selenicereus undatus
Cutting
Egg fruit / canistel
Egg fruit / canistelமுட்டைப் பழம்
Pouteria campechiana
Graft
Strawberry guava
Strawberry guavaஸ்ட்ராபெரி கொய்யா
Psidium cattleyanum
Seedling
Passion fruit
Passion fruitகொடிக்காய்
Passiflora edulis
PKM-1PKM-2
Seedling
Fig
Figஅத்தி
Ficus carica
Australian variety
Cutting

Timber and avenue

மரக் கன்றுகள்

Teak
Teakதேக்கு
Tectona grandis
Burma teak
Seedling
Sandalwood
Sandalwoodசந்தனம
Santalum album
Seedling
Mahogany
Mahoganyமகோகனி
Swietenia macrophylla
KayaAfrican
Seedling
Red sanders
Red sandersசெம்மரம்
Pterocarpus santalinus
Seedling
Kumil
Kumilகுமுல்
Gmelina arborea
Seedling
Sarakonrai
Sarakonraiசரக்கொன்றை
Cassia fistula
Seedling

Besides selling plants

செடி விற்பதோடு

Work we take on

நாங்கள் செய்யும் வேலைகள்

We plant what we have grown ourselves, so we can tell you how it will look in a few years and what it will need from you.

நாங்களே வளர்த்ததைத்தான் நடுகிறோம். எனவே சில ஆண்டுகளில் அது எப்படி இருக்கும், உங்களிடமிருந்து என்ன தேவைப்படும் என்று சொல்ல முடியும்.

Landscape & architecture works

01

Garden design and landscaping

தோட்ட வடிவமைப்பு

Houses, farmhouses, schools, offices and resorts. We plan it, plant it and hand it over.

வீடுகள், பண்ணை வீடுகள், பள்ளிகள், அலுவலகங்கள், விடுதிகள். திட்டமிட்டு, நட்டு, ஒப்படைக்கிறோம்.

 

02

Terrace gardens

மாடித் தோட்டம்

Planned around what the roof can carry and how much water you can spare.

மாடி தாங்கும் எடைக்கும், உங்களால் ஒதுக்க முடிகிற தண்ணீருக்கும் ஏற்ப.

Interiorscaping

03

Indoor greenery

உட்புற பசுமை

Offices, showrooms and lobbies, using plants that really do manage without much light.

அலுவலகங்கள், கடைகள், வரவேற்பறைகள் - அதிக வெளிச்சம் இல்லாமல் வளரும் செடிகளால்.

Xeriscaping

04

Low-water gardening

குறைந்த நீர் தோட்டம்

Gardens built for Theni summers, where missing a week of watering is not fatal.

தேனி கோடைக்கு ஏற்ற தோட்டம். ஒரு வாரம் தண்ணீர் தவறினாலும் பாதிப்பில்லை.

 

05

Field planting

வயலில் நடவு

Orchards and block planting. Our people mark the spacing, dig the pits and plant.

தோப்பு மற்றும் தொகுதி நடவு. அளவு குறித்தல், குழி எடுத்தல், நடுதல் - எங்கள் ஆட்களே.

 

06

Field maintenance

தோட்டப் பராமரிப்பு

Upkeep by the month or the year, if you would rather not manage it yourself.

மாதம் அல்லது வருடக் கணக்கில் பராமரிப்பு.

Ask us

கேளுங்கள்

Questions are free, and always were

கேட்பதற்குக் கட்டணம் இல்லை

Shanthanu puts up short videos most weeks — what to plant this month, why a graft did not take, what to do when the leaves start yellowing. If your question is not covered, call and ask. You do not have to buy anything.

ஷாந்தனு வாரந்தோறும் சிறு வீடியோக்களைப் பகிர்கிறார் - இந்த மாதம் என்ன நடலாம், ஒட்டு ஏன் பிடிக்கவில்லை, இலை மஞ்சளாகத் தொடங்கினால் என்ன செய்வது. உங்கள் கேள்விக்குப் பதில் இல்லை என்றால் அழைத்துக் கேளுங்கள். எதுவும் வாங்க வேண்டியதில்லை.

A message on Instagram will reach him, though a phone call is always answered faster.

இன்ஸ்டாகிராமில் அனுப்பினாலும் சேரும். ஆனால் போன் செய்தால் விரைவாகப் பதில் கிடைக்கும்.

Latest from YouTube

யூடியூபில் சமீபத்தியவை